என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதியவர் மரணம்"
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். (வயது 88). தொழிலாளி.
இன்று காலை அவர் அதே பகுதியில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கோயம்பேட்டில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென்ற முருகேசன் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்த போது டிரைவர் திடீர் பிரோக் போட்டதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து மாணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கல்லடை ஊராட்சி க.புதூரை சேர்ந்தவர் முருகன்(வயது 66). இவர் கடந்த 11-ந்தேதி கடவூர் தரகம்பட்டி அருகே தென்னிலை ஊராட்சி பொசியம்பட்டியில் தனது அண்ணன் சீரங்கன் இறந்ததையொட்டி, 3-ம் நாள் துக்க காரியத்திற்கு சென்றார். அங்கு துக்க காரியம் நடந்தபோது, அதே ஊரை சேர்ந்த தங்கராசு என்பவர் முருகனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது தனது அண்ணன் இறந்த துக்க காரியத்தில் தகராறு செய்ய வேண்டாம் என்று முருகன், தங்கராசுவிடம் கூறினார். அங்கிருந்த முருகன் உறவினர்களும் தகராறு செய்த தங்கராசுவை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த தங்கராசு தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை முருகன் உள்பட 5 பேரின் கண்களின் மீது தூவியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கைகலப்பு ஏற்பட்டது. இது குறித்து முருகன் சிந்தாமணிபட்டியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரனை நடத்தினர்.
மேலும் தங்கராசுவும், தன்னை முருகன் தரப்பினர் அடித்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் முருகன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த உமாபதி, குமார், கணேசன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மிளகாய் பொடி பட்டதில் முருகனின் கண்பார்வை குறைந்ததால், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிந்தாமணிபட்டி போலீசார், முருகன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருவது அவருக்கு தெரியவந்தது.
இதனால் தான் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒருதலை பட்சமாக தங்கராசு அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்து தன்னையும், தனது தரப்பினரையும் போலீசார் தேடிவருகிறார்களே என்று மனவேதனையில் அரசு மருத்துவமனையில் இருந்த முருகன் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். பின்னர் க.புதூர் வீட்டிற்கு நேற்று முருகன் உடலை கொண்டு வந்த உறவினர்கள், இது குறித்து சிந்தாமணிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் அங்கிருந்த போலீசார் புகார் மனுவை வாங்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகனின் மனைவி லட்சுமி மற்றும் உறவினர்கள் போலீசாரை கண்டித்து, தோகைமலை திருச்சி-மெயின் ரோட்டில் உள்ள க.புதூர் பஸ் நிறுத்தம் முன்பு முருகன் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகனின் உறவினர்கள், தங்கராசு உள்பட அவரது தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டும். முருகன் அளித்த புகார் மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆவேசமாக கூறினர். இதையடுத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதியளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மாலை முருகன் உடலை திருச்சி-தோகைமலை மெயின் ரோட்டில் க.புதூர் பஸ் நிறுத்தம் முன்பு சாலையில் வைத்து மீண்டும் மறியல் போராட்டம் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் தலைமையில் தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமதுஇத்ரீஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், மறியல் கைவிடப்பட்டது. இதையடுத்து முருகனின் உடலை உறவினர்கள் எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி கள்ளிக்காட்டை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் 2 நாட்களுக்கு முன்பு ஜெயராமனை அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயராமன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
அஸ்தம்பட்டி பகுதியில் மேலும் பலருக்கு இதே போல காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் புகார் கூறி உள்ளனர்.
எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் முகாமிட்டு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை 16 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் ஜல்லிகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு ரெயில் பின்னோக்கி சென்றது.
திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வழியில் உள்ள ரெயில்வே கேட் அருகில் ரெயில்வே ஊழியர்கள் பயன்படுத்த நிற்க வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் மீது ரெயில் மோதியது.
மோதிய வேகத்தில் கண்டெய்னர் கவிழ்ந்து விழுந்ததில் அருகே அமர்ந்து இருந்த அம்பத்தூர் இந்திராகாந்தி நகரை சேர்ந்த மணி (70) என்ற முதியவர் உடல் நசுங்கி உயிர் இழந்தார். ரெயிலை கண்டெய்னர் பெட்டி தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சரக்கு ரெயிலில் என்ஜின்கள் பொருத்தப்படாத நிலையில் சரக்கு ரெயில் எப்படி பின்னோக்கி வந்தது என்பது தெரியவில்லை.
மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் பாதையில் இன்று விடுமுறை நாள் என்பதால் பெரும் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று பொது மக்கள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #accident
திருவாரூர் அருகே உள்ள காட்டூரை சேர்ந்த ராமையன் என்பவர் மகன் இளையராஜா. (வயது 35). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசைதம்பி (40) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயன்றனர்.
இதனை கண்ட ராமையன் அவர்களை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுபற்றி காட்டூர் கிராம நிர்வாக அலுவலர் உமாமகேஸ்வரி திருவாரூர் தாலுக்கா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
மயிலாடுதுறை அருகே மணல்மேடு போலீஸ் சரகம் கிழாய் கிராமம் பாரதி நகரை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 60). விவசாய கூலி. அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மணிமாறன் (வயது 28). விவசாய கூலி. சம்பவதன்று அப்பகுதி பஸ் ஸ்டாப்பில் குமாரசாமி படுத்திருந்த போது அங்கு நின்று கொண்டு மணிமாறன் செல்போனில் சத்தமாக பேசி கொண்டு இருந்தாராம்.
இதனால் அவரை குமாரசாமி கண்டித்ததால் ஆத்திரமடைந்த மணிமாறன் அவரை பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்து இது குறித்து கூறியுள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது குமாரசாமி மயங்கி கிடந்ததால் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் மணல்மேடு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து மணிமாறனை கைது செய்தார். #tamilnews
தாராபுரம்:
தாராபுரம் காந்திபுரத்தை சேர்ந்தவர் சன்னாசி (80). செருப்பு தைக்கும் தொழிலாளி. இவர் இன்று காலை 5.30 மணியளவில் அப் பகுதியில் நடந்து சென்றார்.
தாராபுரம் - அலங்கியம் சாலையில் 6 அடி ஆழத்தில் சேறும், சகதியுமாக சாக்கடை தேங்கி உள்ளது. இன்று காலை அந்த வழியாக சென்ற சன்னாசி சாக்கடைக்குள் தவறி விழுந்தார்.
இதில் சாக்கடை நீரில் மூழ்கி பலியானார். அவரை நீண்ட நேரமாக காணாததை கண்டு அவரது உறவினர்கள் தேடி வந்து பார்த்த போது சன்னாசி சாக்கடைக்குள் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சன்னாசி உடலை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாராபுரம் - அலங்கியம் ரோட்டில் தேங்கி உள்ள சாக்கடை நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சன்னாசி பலியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்